Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டிலும் காவி மயமா?......காங்கிரஸ் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (12:14 IST)
ஜூன் 30-ல் நடக்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில், இந்திய அணி அணியவிருக்கும் புது சீருடைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் வருகிற ஜூன் 30 ஆம் தேதி  இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதுகின்றன.

அன்றைய போட்டியில், இரு நாடுகளும் ஒரே நிறத்திலான சீருடை அணிவதால் பார்வையாளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க இந்திய அணி ஆரஞ்சு நிற சீருடையை அணிந்து விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த சீருடை நிறமாற்றத்தை கண்டித்து, இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு எதிர்வித்திருக்கிறது. கிரிக்கெட்டிலும் காவி மயத்தை புகுத்தவே மத வாத பாஜக அரசு, ஆரஞ்சு நிறத்தை மாற்றியிருக்கிறது என்றும், இது பாஜக-வின் இந்துத்துவ சர்வாதிகார அரசின் சதி என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு பாடப்புத்தக அட்டைப்படத்தில் பாரதியாரின் முண்டாசு, காவி நிறத்தில் வரையப்பட்டிருந்ததாக அதிமுக அரசின் மீது திமுகவினர் குற்றம் சாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments