Publish Date: Sat, 29 Aug 2026 (08:44 IST)
Updated Date: Sat, 29 Aug 2026 (08:46 IST)
உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு அதிகளவிலான சர்க்கரை வந்துகொண்டிருந்த நிலையில் அங்கு மழை குறைந்த காரணத்தினால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய சர்க்கரை வராததால் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்து கடந்த 24ம் தேதி தமிழகத்தில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால், சர்க்கரையை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் பழச்சாறுகளின் விலை உயர்ந்தது. ஒருபக்கம், சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு பல நடவடிக்கைகளையும் எடுத்தது. அதன்படி 10 லட்சம் டன் சர்க்கரையை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. ஒருபக்கம், இதைப்பயன்படுத்தி சர்க்கரையை பதுக்குவதை தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் சர்க்கரை விலை உயர்ந்துள்ளதால் Zepto, Instamart போன்ற ஆன்லைன் தளங்களில் சர்க்கரை ஆர்டர் செய்ய பயனர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் ஒரு ஆர்டருக்கு அதிகபட்சமாக 2 அல்லது 3 பாக்கெட்டுகளும், Dmart, Reliance கடைகளில் ஒருவருக்கு தலா 2-3 கிலோ சர்க்கரை மட்டுமே வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க