Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோர்பேவாக்ஸ் - தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் என்ன?

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (10:24 IST)
12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பெரியோர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. 
 
12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.400. இந்த தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் குறித்த விவரம் பின்வருமாறு... 
 
1. கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புரத அடிப்படையிலான முதல் தடுப்பூசி ஆகும். 
 
2.  கோவிஷீல்டு தடுப்பூசியை விட கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி கூடுதல் எதிர்ப்பு சக்தி கொண்டது என ஆய்வில் தகவல். 
 
3. கோர்பவாக்ஸ் தடுப்பூசி, கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டீனை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
 
4. பயனாளிகள் 28 நாட்கள் இடைவெளியில், 2 டோஸ் கோர்பவாக்ஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். 
 
5. கொரோனா வைரசுக்கு எதிராக 90 சதவீதமும், டெல்டா வகை வைரசுக்கு எதிராக 80 சதவீதமும் செயலாற்றக் கூடியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments