Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.82 லட்சமாக உயர்வு - பீதியில் மக்கள்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (09:56 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 2 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ளது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  2,82,970 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,79,01,241 ஆக உயர்ந்தது. அதோடு புதிதாக 441 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,87,202 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,88,157 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,55,83,039ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,31,000 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் 1,58,88,47,554 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 76,35,229 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments