Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் மீண்டும் உயரும் கொரோனா கேஸ்கள்: 3வது அலை தொடக்கமா?

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (07:45 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது தினமும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. அதில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் தான் மிக அதிகமானோர் வாழ்க்கை பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் கட்டுப்படுத்தப்பட்டது என்பதும் இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்பு 40,000 மட்டுமே வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மீண்டும் மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மூன்றாவது அறை தொடங்கி விட்டதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 9336 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளதாகவும், மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 123 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்றும்  அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மகாராஷ்டிராவில் 3,378 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்றும், மகாராஷ்டிராவில் 1,23,225 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர் என்றும், மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தமாக 60,98,177 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments