Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3.13 கோடி பேர் பாதிப்பு; 4.20 லட்சம் பலி – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Advertiesment
India
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 39,742 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,13,71,901 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 535 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,20,551 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,05,43,138 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,08,212 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 நிமிஷத்துல இதை அப்டேட் செய்யலைனா; மோசடி மெசேஜ்கள்! – காவல்துறை எச்சரிக்கை!