கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15-ல் விற்பனை என்பது வதந்தியே என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க உலக நாடுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் covaxin TM என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இதனை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இந்த மருந்தை மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது வெறும் வதந்தி என கூறப்படுகிறது. ஆம், ஐசிஎம்ஆர் இது குறித்து வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு.. covaxin தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி பரிசோதிக்கும் பணியை ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் துரிதமாக முடிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டிருந்தது தெரியவந்துள்ளது.