கோடை வெயிலை சமாளிக்க போராடும் டெல்லி விவசாயிகளின் ஏற்பாடுகள்
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 117 வது நாளாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகள் தங்குவதற்காக தற்காலிக வீடுகளை அமைத்து இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் வெப்பம் அதிகமாக இருப்பதால் தற்காலிக தங்கும் வீடுகளில் மேல் தற்போது வைக்கோல் போடும் பணியில் உள்ளனர். இதனால் அவர்கள் தங்கும் வீடுகளில் உள்ளே வெப்பம் குறைவாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
இன்னும் எத்தனை நூறு நாட்கள் ஆனாலும் இந்த இடத்தை விட்டு அகல போவதில்லை என்றும் மத்திய அரசு புதிய வேளாண்மை சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் கோடை வெயிலை சமாளிக்க மேலும் சில ஏற்பாடுகளை செய்ய போவதாகவும் போராட்டம் நடத்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்