டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக அலுவலகம் வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க டெல்லி அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
இதன்படி, டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டை மீறினால், நிறுவனங்கள் மீதும் ஊழியர்கள் மீதும் அபராதம் உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது காற்று மாசு அதிகரித்து வருவதால், மீண்டும் அதே நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.