மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஹரியானா பஞ்சாப் உள்ளிட்ட ஒரு சில மாநில விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த போராட்டம் தற்போது 20-வது நாளாக தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 20-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் டெல்லி மற்றும் அரியானா எல்லையான சிங்கு என்ற பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டமாக பாஜக அலுவலகங்களை மூடுதல் பாஜக தலைவர்களின் இல்லங்கள் முன் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதால் இந்த போராட்டத்தை அதிரடிப்படையினர் மூலம் முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது
டெல்லி ஹரியானா எல்லையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு போராட்டம் செய்து வரும் விவசாயிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது