Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சர் எல்.முருகனுக்கு துறை ஒதுக்கீடு

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (23:58 IST)
மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சர்வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  மேலும், மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாஹேப், ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் தங்களில் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களுக்கு வேறு துறைகள் வழங்கப்படுமா அல்லது இவர்களுக்கு மாற்றாக புதியவர்கள் இப்பதவியில் பொறுப்பேற்பார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.  இன்று காலையில் பிரதமர் மோடி புதிய அமைச்சரவையில் இடம்பெறுவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக  பாஜக தலைவராக உள்ள எல்.முருகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் இந்தத் தகவல் உறுதியானது.

தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் உள்பட 43 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பதவி ஏற்க இருக்கும் புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியலியலும் வெளியானது.

இந்நிலையில்,  எல்.முருகனுக்கு  மீன்வளம், கால்நடை, மற்றும் பால்வளத்துறை , தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை  இணை அமைச்சர் ம பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது, கிரிராஜ் சிங்கிற்கு ஊரக வளர்ச்சியும், பஞ்சாயத்துராஜ் பசு பசுபதி குமர் பாரஸிற்கு உணவுப் பதப்புடுத்துதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான போக்குவரத்துறை அமைச்சராக ஜோதிராந்தித்ய சிந்தியாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments