Publish Date: Sat, 25 Jul 2026 (14:36 IST)
Updated Date: Sat, 25 Jul 2026 (14:44 IST)
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது மற்றும் தேர்வில் நடைபெற்ற முறைகேடு ஆகியவற்றால் கோபமடைந்த இளைஞர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக்கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில நாட்களாகவே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக துவங்கப்பட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா தளம் இந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தது. அவர்களோடு பல இளைஞர்களும், மாணவர்களும் சேர்ந்து கொண்டனர். நேற்று கரப்பான் பூச்சி ஜனதா தளத்தை சேர்ந்த 2 நிர்வாகிகளிடம் ஜேபி. நட்டா உள்ளிட்ட 2 மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பிரதமர் மோடியும் இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் இளைஞர்கள் சதி வலையில் சிக்கி விட மாட்டேன்.. இந்தியாவில் இளைஞர் சக்தியே நமது உண்மையான பலம்.. அவர்களின் கனவுகளை எதிர்பார்ப்புகளை மதிக்கிறேன். கடந்த 10 நாட்களாக நடந்த சம்பவங்களை பார்த்து மனம் கலங்கி போயிருக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து இந்த வெற்றிய கரப்பான் ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்களும், மாணவர்களும் கொண்டடி வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க