Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிஷீல்டு போட்டதால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? – மருத்துவர்கள் விளக்கம்!

Prasanth Karthick
புதன், 1 மே 2024 (12:21 IST)
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் இந்த தடுப்பூசி போட்ட இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.



2019 தொடங்கி உலகையே கொரோனா அச்சுறுத்தி வந்த நிலையில் பல நாடுகளும் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வந்தன. அந்த வகையில் பிரிட்டனின் ஆஸ்ட்ராஜெனிகா தயாரித்த கோவிஷீல்டு பிரிட்டன், இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த மக்களுக்கு செலுத்தப்பட்டது. ஆனால் இந்த மருந்தால் பக்க விளைவு ஏற்படுவதாக பலர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அது தொடர்பான விளக்கத்தில் மருந்தை தயாரித்த ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இந்த தடுப்பூசியால் குறைந்த அளவிலான பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பலரையும் இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கோவிஷீல்டால் பக்கவிளைவு ஏற்படலாம் என்பதை 2021ம் ஆண்டிலேயே அந்நிறுவனம் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: ஏற்காடு பேருந்து விபத்து: ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை

இதுகுறித்து பேசிய IMA துணை தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், கோவிஷீல்டின் மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து அப்போதே ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டதாகவும், உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், கோவிஷீல்டால் ஏற்படும் பக்கவிளைவு என்பது மிகவும் அரிது என்றும், இந்தியாவில் ஒரு மில்லியன் டோஸ்களுக்கு 0.61 என்ற விகிதத்திலேயே பக்கவிளைவுகள் குறித்த வழக்கு பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசி போட்ட மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஈபிஎஸ் உடன் விவாதத்திற்கு நான் தயார்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

அடுத்த கட்டுரையில்
Show comments