Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் போட்டி!

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (08:12 IST)
பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளிலும் காலங்காலமாக கட்சியில் உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கட்சியில் இணையும் திரையுலக பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு சீட் கொடுப்பது, அக்கட்சிகளின் தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது
 
அந்த வகையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு கிழக்கு டெல்லியில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அரவிந்தர்சிங் லவ்லி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் மே 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கவுதம் கம்பீர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பிரச்சார களத்தில் இறங்கிவிட்டார்., அவருக்கு ஆதரவாக ஒருசில கிரிக்கெட் வீரர்களும் வாக்கு சேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது
 
டெல்லியில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி இருப்பதால் கவுதம் காம்பீர் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று அங்குள்ள நிலவரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments