பெட்ரோல் பங்குகளில் இருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படங்களை அகற்றவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள்,கட்சி கொடிகள் ஆகிவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறையாகும்.
இந்நிலையில் மத்திய அரசின் விளம்பரங்களில் இடம்பெற்றிருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை 3 நாட்களுக்குள் நீக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.