Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாசி பழத்துக்குள் வெடி… கொரோனாவை விட கொடிய மனிதன்! யானைக்கும் குட்டிக்கும் நடந்த கொடூரம்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (07:15 IST)
கேரளாவில் ஊருக்குள் புகுந்த யானைக்கு அண்ணாசிப் பழத்தில் வெடி வைத்துக் கொலை செய்துள்ளனர் சிலர்.

கேரள மாநிலம், மலப்புரம் கிராமத்துக்கு அருகில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனைப் பார்த்த சிலர் அண்ணாசிப் பழம் ஒன்றை அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த அண்ணாசிப் பழத்தை யானைக் கடிக்கையில் அதில் வைக்கப்பட்டு இருந்த வெடி ஒன்று வெடித்துள்ளது. இதனால் யானையின் நாக்கு மற்றும் வாய் கடுமையாக காயமடைந்துள்ளது.

இதையடுத்து வலியுடனேயே அந்த கிராமத்தைச் சுற்றி வந்த யானை, அந்த ஊரில் இருக்கும் வீட்டையோ மனிதர்களையோ தாக்கவில்லை. இதையடுத்து வெள்ளியாற்றில் இறங்கி நின்றுள்ளது அந்த யானை. வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை கும்கி யானைகளோடு மீட்க முயன்றுள்ளனர். ஆனால் ஆற்றை விட்டு வெளியே வராத அந்த யானை, மே 27 ஆம் தேதி இறந்துள்ளது. இதையடுத்து மருத்துவர் முன் நடந்த பிரேதப் பரிசோதனையில் அந்த யானையின் வயிற்றில் ஒரு சிசு இருந்தது தெரிந்துள்ளது.

அந்த யானையின் மரணம் பற்றி வனத்துறை அதிகாரி சமூகவலைதளத்தில் பகிர, அது இப்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் யானைக்கு வெடி வைத்துக் கொடுத்தவர்களை பலரும் கடுமையாக திட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments