இன்றைய நாடாளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்ய உள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் மற்றும் விவாதம் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து, நாளை மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து, எம்பிக்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சற்றுமுன் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
வக்பு மசோதாவை எதிர்ப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று மாலை நடைபெற்ற இந்திய கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆலோசனையில், மசோதாவை கடுமையாக எதிர்க்க முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.