சாலையில் ஸ்கூட்டி ஓட்டி சென்ற பெண் திடீரென வாகனத்தை திருப்பியதால் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் விபத்திற்குள்ளாக இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலைகளில் பெண்கள் ஸ்கூட்டி அதிகமாக ஓட்டி செல்லும் நிலையில் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றாமல் அவர்கள் செய்யும் செயல்களால் சாலையில் விபத்துகள் ஏற்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. ஸ்கூட்டியில் ப்ரேக் இருந்தாலும் கூட அதை பயன்படுத்தாமல் காலையே ப்ரேக்காக பயன்படுத்தும் பெண்களும், இண்டிகேட்டர் போடாமல் திடீரென வண்டியை திருப்பும் பெண்களும், வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றனர்.
இதில் கேரள முதல்வர் பிணராயி விஜயனும் தப்பவில்லை. நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார், பாதுகாப்பு வாகனங்களுடன் வாமனபுரம் சாலையில் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது சாலையின் இடது புறத்தை ஒட்டி ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த பெண், எந்த விதமான சிக்னலும் செய்யாமல் சாலையில் வலதுபுறத்திற்கு க்ராஸ் செய்தார்.
இதனால் பாதுகாப்பு வாகனங்கள் திடீரென ப்ரேக் போட்டதால் அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்களும், பினராயி விஜயன் பயணித்த காரும் ஒன்றுடன் ஒன்று மெதுவாக மோதிக் கொள்ள நேர்ந்தது. நல்வாய்ப்பாக இதில் பினராயி விஜயன் காயங்களின்றி தப்பினார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களிடம், சக வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் முதலமைச்சரே எச்சரிக்கையாகதான் செல்ல வேண்டியுள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K