Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”இது ஒன்றும் கிச்சடி கூட்டணியல்ல.. “ முதல்வர் பேட்டி

”இது ஒன்றும் கிச்சடி கூட்டணியல்ல.. “ முதல்வர் பேட்டி

Arun Prasath

, சனி, 23 நவம்பர் 2019 (12:08 IST)
மஹாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்நாவிஸ் “இது ஒன்றும் கிச்சடி கூட்டணி” அல்ல என கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
webdunia

ஆனால் இன்று பாஜகவின் ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதவி பிரமாணத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்நாயக், “விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இது ஒன்றும் அவசரமாக எடுக்கப்பட்ட கிச்சடி கூட்டணி அல்ல” என கூறியுள்ளார்.
webdunia

எனினும் தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார், “இது கட்சியின் முடிவல்ல அஜித்பவார் எடுத்த சொந்தமுடிவு தான்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரத்பவாரின் முதுகில் குத்திய அமித்ஷா: கே.எஸ்.அழகிரி ஆதங்கம்!