Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம் எல் ஏவை கன்னத்தில் அறைந்த விவசாயி… உ.பி.யில் பரபரப்பு!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (15:00 IST)
உபியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம் எல் ஏவை விவசாயி ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பாஜக வலுவாக இருக்கும் மாநிலங்களில் ஒன்று. ஆனால் கடந்த ஒரு வருடமாக நடந்த விவசாயிகள் போராட்டத்தை பாஜக அலட்சியப்படுத்தியதால் உ.பி.யை சேர்ந்த விவசாயிகளும் பாஜக மேல் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக வேலை செய்து வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள உன்னாவ் என்ற பகுதியில் நடந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள பாஜக எம் எல் ஏ பங்கஜ் குப்தா வந்திருந்தார். மேடையில் அமர்ந்திருந்த அவரிடம் வந்த முதிய விவசாயி ஒருவர் அவரிடம் கோபமாக எதோ பேசி கன்னத்தில் அறைந்தார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பாஜகவின் எதிர்கக்ட்சிகள் இந்த வீடியோவைப் பரப்பி கேலி செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து எம் எல் ஏ பங்கஜ் குப்தா விவசாயி தன்னை அடிக்கவில்லை என்றும் கன்னத்தில் அன்புடன் தட்டிச் சென்றார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments