மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 9வது நாளாகப் போராடி வருகின்றனர்.
நேற்று 4 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்தது. ஆனால் அப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், நாடு முழுவதும் முழு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#delhiprotest #farmers