Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்க்கிங் பிரச்சனையில் ஒருவருக்கு துப்பாக்கி சூடு

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2018 (11:37 IST)
டெல்லியில் உள்ள பாரில் வாகன பார்க்கிங் தொடர்பாக நடந்த தகராறில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மதுபான பாரில்  இன்று அதிகாலை 3.30 மணிக்கு, புத்தாண்டு நிகழ்ச்சியில் குடித்து விட்டு வெளியே வந்த வினய், உமேஷ் ஆகிய இருவரும் வாகன நிறுத்தத்தில் இருந்த தங்களது வாகனத்தை எடுக்கும் போது இருவரது வாகனமும் மோதியது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. வாய்ச்சண்டை முற்றியதால் உமேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து  வினையை நோக்கி சுட்டுள்ளார். வினய் கழுத்தில் குண்டு பாய்ந்து கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் வினையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபான பார்களை நள்ளிரவு 1 மணியுடன் மூட வேண்டும் என்ற விதிமுறையை மீறி அதிகாலை 3.30 மணி வரை செயல்பட்ட பாரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments