ராஜஸ்தான் மாநிலத்தில் தாயத்து செய்வதற்கான புலியின் மீசையை வெட்டியுள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.
இந்தியாவின் புலிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதைப்பாதுகாக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் தாயத்து செய்வதற்காக வேண்டி உடல்நலக்குறைவு ஏற்பட்ட புலியில் மீசையை மூத்த வனத்துறை அதிகாரிகள் வெட்டியதாக வனத்துறைக் காவலர் ஒருவர் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தக் கடிதத்தை வனக்காவலர் விலங்கு நலப் பாதுக்காப்பு ஆணையம் மற்றும் வனத்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்பியுள்ளார்.