நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக நேற்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தனர்
அந்த வகையில் டெல்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கலந்து கொண்டார்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போது காவல்துறையினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டு தள்ளுமுள்ளு காரணமாக ப சிதம்பரம் கீழே விழுந்ததாகவும் இதனால் அவரது இடது விலா எலும்பு உடைந்ததாகவும் கூறப்படுகிறது
இது குறித்து ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் மூன்று முரட்டுத்தனமான போலீஸ்காரர்கள் என் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விலா எலும்பு நுனைப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால் குணமாக 10 நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் நலமாக இருப்பதாகவும் விரைவில் பணிக்கு திரும்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்