Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்- முதல்வர் கெஜ்ரிவால்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (20:22 IST)
டெல்லியில் இளம்பெண்ணை காரின் கீழ் இழுத்துச் சென்றதில் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என  முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்  நடைபெற்றபோது,  அப்பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சுல்தான்புரி பகுதியில் தனது ஸ்கூட்டியில் சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த காரில் மோதி விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் பெண்ணின் ஆடை காரில் சிக்கியது. அதை கண்டுகொள்ளாத காரை ஓட்டியவர்கள் காரை 4 கி.மீ தூரத்திற்கு ஓட்டி சென்ற நிலையில் இளம்பெண் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இதில், பலத்த காயம் அடைந்த அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் காரில் சென்ற 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது:


ஆண்கள் சிலர் தங்கள் காரின் கீழ் இளம்பெண்ணை இழுத்துச் சென்று உயிரிழந்த விவகாரம் ஒரு துரதிஷ்டவசமானது.

இதில், சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்கும் தூக்கு தணட்னை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து நான் ஆளுனர் சக்சேனாவிடமும் பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments