புதிய நிதியாண்டு முதல் 3 ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச கேஸ் சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த கோவா அரசு முடிவு.
சமீபத்தில் நடந்த கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் கோவா மாநிலத்தின் முதலமைச்சர் தேர்வில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் பிரமோத் சாவந்த் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது, தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தோம். தற்போது அதனை நிறைவேற்றும் விதமாக வரும் புதிய நிதியாண்டு முதல் 3 ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச கேஸ் சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.