+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பு வருகிறதா? மத்திய அரசு எச்சரிக்கை

Mahendran
வியாழன், 26 டிசம்பர் 2024 (10:33 IST)
+8, +85, +65 ஆகிய எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

+91 என்று தொடங்கும் எண்கள் அல்லாமல், பிற எண்களில் தொடங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு வந்தால், மோசடி அழைப்புகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மோசடி அழைப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச எண்களில் இருந்து தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் அரசு அதிகாரிகள் போல் பேசி, மன மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளை தடுக்கும் அமைப்பை அக்டோபர் 22 அன்று அறிமுகம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், 1.35 கோடி அழைப்புகள் சர்வதேச எண்களில் இருந்து இந்திய எண்களுக்கு மோசடி அழைப்புகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து அழைப்பு வந்தாலோ, சந்தேகத்துக்கிடமான எண்களில் இருந்து அழைப்பு வந்தாலோ, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்போது ஏர்டெல் நிறுவனம், சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்தும், அவற்றை சுட்டிக்காட்டும் வகையிலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளது. இதேபோல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி மற்றும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியது..!

கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி செய்யலாமா? செந்தில் பாலாஜிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

பீகாரை வட்டமிடும் பிரியங்கா காந்தி.. ஒரே மாதத்தில் இரண்டு முறை பயணம்..!

H1B விசா கட்டண உயர்வு.. இந்தியாவில் புதிய கிளையை தொடங்கும் அமெரிக்க நிறுவனம்..!

நெல்லையில் மாணவரை அறிவாளால் வெட்டிய சக மாணவன்.. சாதி சண்டையா? போலீஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments