Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் செல்லப்பெயரை நாய்க்கு வைத்ததால் விபரீதம்! – பெண் மீது கொலை முயற்சி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (11:04 IST)
குஜராத்தில் மனைவியின் செல்லப்பெயரை நாய்க்கு வைத்த பெண்ணை நபர் ஒருவர் நெருப்பு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த நீடாபென் என்ற பெண் தான் வளர்த்து வந்த நாய்க்குட்டிக்கு “சோனு” என பெயரிட்டுள்ளார். அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் பர்வத் என்பவர் தனது மனைவியை செல்லமாக “சோனு” என அழைத்து வந்துள்ளார்.

ஏற்கனவே இருவீட்டாருக்கும் குடிநீர் பங்கீட்டில் சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோனு என தனது மனைவியின் செல்லப்பெயரை வேண்டுமென்றே நாய்க்குட்டிக்கு வைத்துள்ளதாக நீடாபென்னிடம் பர்வத் ஆட்களுடன் சென்று சண்டையிட்டுள்ளார். இதில் கூட சென்ற நபர் ஒருவர் நீடாபென் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் தீக்காயங்களுடன் நீடாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments