Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி.. போட்டியின்றி தேர்வான பாஜக வேட்பாளர்..!

Mahendran
திங்கள், 22 ஏப்ரல் 2024 (15:48 IST)
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாஜக போட்டி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பதும் இன்று வேட்புமனு தாக்கல் பரிசீலனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி என்பவர் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அது மட்டும் இன்றி அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பிற அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்களது வேட்பமனுவை வாபஸ் பெற்றனர் 
 
இதனை அடுத்து குஜராத் மாநிலம் சூரத் தொகுதிகள் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் என்பவர் போட்டி இன்றி தேர்வானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி எப்போது? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

இருட்டுக்கடை யாருக்கு சொந்தமானது? குடும்பத்தில் எழுந்த பங்காளி தகராறு!?

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை..!

பாகிஸ்தான் வான்வெளி தடை: சுற்றி செல்லும் விமானங்கள்.. கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு..!

”திரும்ப காஷ்மீருக்கே போங்க?” காஷ்மீர் மாணவர்களை தாக்கி அச்சுறுத்தும் வட மாநிலத்தவர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments