Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ICUவில் இருந்த பெண்ணுக்கு மயக்க நிலையில் வன்கொடுமை! மருத்துவமனை ஊழியர்களே நடத்திய கொடூரம்!

Advertiesment
ICU

Prasanth Karthick

, புதன், 16 ஏப்ரல் 2025 (13:40 IST)

ஹரியானாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனை ஊழியர்களே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹரியானாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான நிறுவனம் ஒன்றில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் இவர் உடல்நலக் கோளாறால் குருகிராமில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கும் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் அதிக கவனம் கோரும் நோயாளிகளை வைத்திருக்கும் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை அங்கு பணிபுரிந்த மருத்துவ பணியாளர்களே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்ததாலும், அரை மயக்க நிலையில் அவர் இருந்ததாலும், அந்த பெண்ணால் அவர்களை தடுக்க முடியவில்லை. 

 

ஆனால் சிகிச்சைக்கு பின் வெளியேறிய அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த மருத்துவமனை ஆண் ஊழியர்கள் தன்னை வன்கொடுமை செய்தபோது, செவிலியர்கள் சிலரும் உடன் இருந்து பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் அவரது புகாரில் கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோனியாவும், ராகுலும் ஜாமீனில் தான் உள்ளார்கள்: பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்