Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் துணி மாற்றுவதை பார்த்த தலைமை அசிரியர் - செருப்பால் அடித்த பெற்றோர்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (11:56 IST)
உத்திரபிரதேசத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிகள் துணி மாற்றுவதை மறைந்திருந்து பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக மாணவிகள் பள்ளிகளில் பாலியல் இம்சைகளுக்கு ஆளாக்கப்படுவது அதிகமாக உள்ளது. பெற்றோர் ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது தான் கொடூரத்தின் உச்சம்.
 
இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் ஹசாயான் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. 
 
புதிதாக வழங்கப்பட்ட சீருடைகளை மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மாணவிகள் சீருடை மாற்றுவதை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மறைந்திருந்து பார்த்துள்ளார்.
 
இதனைக்கண்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்து, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி கதறியுள்ளனர். உடனடியாக பள்ளிக்கூடத்திற்கு விரைந்த பெற்றோர் தலைமை ஆசிரியரை ஆத்திரம் தீர செருப்பால் சரமாரியாக அடித்து துவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்