Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மீண்டும் கொடூரம்; கொரோனா பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (16:47 IST)
கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் கற்பழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதுபோன்ற மற்றொரு வன்கொடுமை சம்பவமும் நடந்துள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்து சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். எனினும் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி பிரதீப் என்பவர் அந்த பெண்ணிடம் கொரோனா குறித்து விசாரிப்பது போல அடிக்கடி போன் மூலமாக பேசி வந்துள்ளார்.

அந்த பெண்ணின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்த நிலையில் தனது வீட்டிற்கு வந்து கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பிரதீப் கூறியுள்ளார். இதற்காக பிரதீப் வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணை கட்டிப்போட்டு வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

எனினும் அந்த பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பிரதீப்பை கைது செய்துள்ளனர். தொடர்ந்து பெண்கள் மீது கொரோனா பாதிப்பை கூட கருதாமல் நடத்தப்படும் இவ்வாறான பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்