Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (14:40 IST)
கேரளா மாநிலத்தில் சில மாதங்களுக்க்கு முன் ஷவர்மா சாப்பிட்ட பின்பு பலருக்கும் உடல் நலக்குறைவும், உயிர்ப்பலியும் ஏற்பட்டது. இதன் பின்னர், கேரளா அரசு துரித உணவகங்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வைக்கப்பட்டது.
 
மேலும் ஓட்டல் ஊழியர்களுக்கு சுகாதார பரிசோதனைகள் செய்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், இவை தொடர்பான பல்வேறு விதிமுறைகள் கூறப்பட்டன.
 
இந்த நிலையில் இன்று திடீரென திருவனந்தபுரம் நகரின் கிளிப்பாலம், கரமன், அட்டுக்கல், மணக்காடு, கமலேஸ்வரம், ஸ்ரீவராகம் மற்றும் பேட்டா பகுதிகளில் 30-க்கும் மேற்பட்டோர் திடீர் வாந்தி மற்றும் பேதியுடன் பாதிக்கப்பட்டனர். அவர்களிடம் உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
 
பாதிக்கப்பட்டவர்களிடன் விசாரணை செய்தபோது அவர்கள் அனைவரும் ஷவர்மா வாங்கி சாப்பிட்டதினால்தான்  உடல் நலபாதிப்புகளை அனுபவித்ததாக கூறினர்.  இதனை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு உள்ள உணவுகளின் மாதிரிகள் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிக்கிற அடியில.. பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாவார்கள்! - பிரதமர் மோடி கர்ஜனை!

இவர் யாருங்க வரி போடுறதுக்கு..? ட்ரம்ப்பை முதுகில் குத்திய அமெரிக்க மாகாணங்கள்! - நீதிமன்றத்தில் வழக்கு

கும்பகோணத்தில் ’கருணாநிதி பல்கலை கழகம்’: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments