Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் கடிதம்!

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் கடிதம்!
, புதன், 15 ஏப்ரல் 2020 (15:31 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ்   பரவியுள்ளது. உலகளவில் இந்த நோய்க்கு 19,81,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,86,622 பேர் குணமடைந்துள்ளனர்.சுமார், 126681 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், 11,439 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1306  பேர் குணமடைந்துள்ளனர். மொத்தாமக் 377 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

 இந்நிலையில்,நாட்டில் கொரொனாவை தடுக்க  மத்திய அரசு வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஊரடங்கின்போது, உளதுறை அமைச்சகம் கூறியுள்ள  வழிமுறைகளை எந்தச் சமரசமும் இன்றி செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசுகள், மத்திய அரசு கூறியுள்ள அறிவுறுத்தல்களை மாற்றவோ, தளர்த்தவோ கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி வேலை நேரத்தில் மீண்டும் மாற்றம்: வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு