Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடல் – சேது பாலத்தில் செல்ல பயன்பாட்டு கட்டணம் இவ்வளவா? – அதிர்ச்சி அளிக்கும் கட்டண பட்டியல்!

Prasanth Karthick
வெள்ளி, 12 ஜனவரி 2024 (13:59 IST)
இன்று மும்பையில் பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் – சேது பாலத்தை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டணம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.



மகாராஷ்டிராவில் மும்பை – நவி மும்பையை இணைக்கும் இந்தியாவிலேயே மிக நீளமான பாலமான ”அடல்-சேது” பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். மொத்தமாக 21.8 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த பாலத்தில் 5.5 கி.மீ தொலைவு கடலுக்கு மேலே அமைந்துள்ளது. இந்த பாலம் இன்று திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் இந்த பாலத்தில் பயணிக்க வாகனங்களின் தன்மைக்கேற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கார் ஒருவழியாக பயணிக்க ரூ.250 கட்டணமாகவும், சென்று திரும்பி வர ரூ.375 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஒரு வழியாக மட்டும் பயணிக்க மினி பஸ்ஸிற்கு ரூ.400, பேருந்து, ட்ரக்குகளுக்கு ரூ.830, அதிக எடை கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்லவே ரூ.1580 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? கேள்விக்கு தமிழிசையின் ரியாக்சன்..!

மாத பாஸ் எடுத்தால் கூட காருக்கு மட்டும் குறைந்த பட்சமாக ரூ12,500 வருகிறது. இந்த தகவல் பலகை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சிலர் “அரசு செலவில் கட்டிய பாலத்திற்கு இவ்வளவு கட்டணம் தேவையா? சற்று குறைத்து வசூலிக்கலாம்!” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் மற்றும் சிலர் “இந்தியாவிலேயே 21 கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட பாலம் இது. அதனால் இதை பராமரிப்பதற்கான செலவுகளை வாகன கட்டணங்களில்தான் ஈடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் கட்டணம் விதிப்பது சரியே” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments