Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணிக்கு வெறும் 94 தொகுதிகள் தான்: ஜி நியூஸ்-மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு..!

Mahendran
வியாழன், 29 பிப்ரவரி 2024 (16:53 IST)
பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டணிக்கு வெறும் 94 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துகணிப்பின் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்கு செலுத்துவீர்கள் என்ற கருத்து கணிப்பை ஜி நியூஸ்-மேட்ரிஸ் என்ற நிறுவனம் எடுத்த நிலையில் அதில் இந்தியா கூட்டணிக்கு வெறும் 94 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு 72 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 377 தொகுதிகள் கிடைக்கும் என்றும் பாரதிய ஜனதாவுக்கு தனியாக 300 தொகுதிகளுக்கும் அதிகமாக கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 303 தொகுதிகளை பாஜக வென்ற நிலையில் அதைவிட அதிகமான இடங்களை இந்த முறை கைப்பற்றும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது
 
இதுவரை வெளியான கருத்துகணிப்புகளில் பாஜக 300 தொகுதிகளுக்கும் அதிகமாக கைப்பற்றும் என்றே முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments