இந்தியா கூட்டணி சார்பில் மும்பையில் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்டு 25 மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி தலைவர்களிடையே பல்வேறு கருத்து மோதல்கள் உள்ளதால் இக்கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டு வருகிறது.
இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சரான நிதீஷ்குமார் விலகினார். இதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார் . இதனால் இந்தியா கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மும்பையில் நாளை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பைக்கு நாளை சொல்கிறார். நாளை காலை மும்பை செல்லும் முதல்வர் ஸ்டாலின், பொதுக் கூட்டம் முடிந்து அன்று இரவே சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.