Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டைச் சூறையாடுவது தான் இந்தியா கூட்டணியின் எண்ணம்- அமைச்சர் ஸ்மிருதி இரானி

Sinoj
சனி, 6 ஏப்ரல் 2024 (15:21 IST)
நாட்டில் 18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை   நடைபெறவுள்ளது. 
 
இதையொட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவின்படி  நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தட்டது.
 
இந்த நிலையில்,  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
கடந்த 2 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, இம்முறையும் வெற்றி பெற தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
 
சமீபத்தில்  வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கலும் நடைபெற்றது.
 
இந்த நிலையில், ஒவ்வொரு கட்சியும் மாற்றுக் கட்சியினர் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது;
 
மீண்டும் மோடி,  வேண்டும் மோடி என நாடே கூறி வருகிறது. எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி எனக் கூற முடியும்! ஆனால், இந்தியா கூட்டணியால்?
 
 நாட்டைச் சூறையாடுவது தான் இந்தியா கூட்டணியின் எண்ணம். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியபோது தமிழகம் கொதித்து எழுந்தது.
 
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஜனநாயகத்தை பற்றி எப்படிப் பேச முடியும்? கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.1.46 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments