Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (09:02 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,202 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,31,23,801 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,24,241 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,82,243 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 17,317 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments