பாகிஸ்தானின் பிரச்சார சமூக ஊடக கணக்குகள், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அரசியல் கைதியாக இந்தியா ஏற்றுக்கொள்ள ஒரு ரகசிய வெளியுறவு அமைச்சக திட்டம் இருப்பதாக பரப்பிய கூற்றை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த கூற்றை மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
PIB தனது 'X' தளப் பதிவில், "இந்த கடிதம் போலியானது. இந்தக் கூற்றுகள் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் பாகிஸ்தானின் தவறான தகவல் பரப்புதல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்" என்று உறுதிப்படுத்தியது.
சமீபத்தில் இம்ரான் கான் மரண வதந்திகள் பரவிய நிலையில் இந்த கட்டுக்கதை வெளியாகியுள்ளது. நம்பகமான தகவல்களுக்கு அரசின் அதிகாரப்பூர்வ மூலங்களை மட்டுமே நம்பும்படி PIB பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.