Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க டாலரை ஒழித்து கட்டிய இந்திய ரூபாய்!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (20:25 IST)
ஈரானுடன் போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அதன் பின்னர் ஈரான் மீது பல பொருளாதார தடைகளை விதித்தது. ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள கூடாது எனவும் மிரட்டியது. 
 
ஆனால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஈரானும் ஒன்ரௌ என்பதால் பல நாடுகள் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியவில்லை. இதன் பின்னர் ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொள்ளும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் மிரட்டியது. 
 
இதனையடுத்து தானகவே முன்வந்து இந்தியா, சீனா, கொரிய குடியரசு, துருக்கி, தைவான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. இருப்பினும் கச்சா எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், இந்தியா ஈரானுடன் புது ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி இனி வாங்கும் கச்சா எண்ணெய்க்கு, அமெரிக்க டாலருக்கு பதில் இந்திய ரூபாயில் பணத்தை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதாவது, ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு தர வேண்டிய தொகையை பாதியளவு பொருட்கள் ஏற்றுமதி செய்தும், மீதித்தொகையை ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments