Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

Mahendran
புதன், 7 மே 2025 (14:08 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியா இந்திய முப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 முகாம்கள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இடங்கள், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என மொத்தம் 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
 
இந்த தாக்குதல், பஹல்காமில் இந்திய படைவீரர்கள் மீது நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலாக மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இந்திய படைகளை பாராட்டினர்.
 
மேலும், வெளிநாட்டு அமைச்சக செயலாளர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதுகுறித்து ஊடகங்களுக்கு விரிவான விளக்கங்களையும் ஆதாரங்களையும் வழங்கினர்.
 
இந்நிலையில், “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
 
இதற்கிடையில், பிரதமர் மோடியின் தலைமையில்  அமைச்சரவை கூட்டமும் நடந்தது. நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments