பாகிஸ்தான் உடனான சண்டை குறித்த முழு விவரங்களை பகிர முடியாது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா சிறிய போர் விமானங்கள் அலைபோல இந்திய எல்லையை நோக்கி வந்ததாக தெரிவித்த ஏகே பாரதி, ஆனால் அவை அனைத்தும் எங்கள் பாதுகாப்புப் படையால் திறமையாக தடுக்கப்பட்டன என்றும், இந்த ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன என்றும் அவர் கூறினார்.
இந்த மோதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நவீன மற்றும் பாரம்பரிய ஆயுதங்களை சேர்த்துக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஏர் மார்ஷல் விளக்கினார். வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து ட்ரோன்களையும் முறியடித்தோம் என்றும், இது மத்திய அரசின் தொடர் ஆதரவால் சாத்தியமாகியதாகவும் கூறினார்.
மத்திய அரசு நிதி மற்றும் திட்டமிடல் ரீதியாக கடந்த 10 ஆண்டுகளில் பெரிய துணையாக இருந்ததாக அவர் நன்றியுடன் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் ரெய்னியார் விமான தளத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியது, அதனால் ஏற்பட்ட சேதங்களை வீடியோவாக வெளியிட்டோம் என்றும் கூறினார்.
"நமது இழப்புகள் மிக குறைவானவை, ஒவ்வொரு மோதலும் தனித்துவமானது என்றும் ஏ.கே. பாரதி தெரிவித்தார்.