Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை உயர்ந்தாலும் ஃபார்மா பங்குகள் பெரும் சரிவு.. டிரம்ப் மிரட்டல் காரணமா?

Siva
திங்கள், 12 மே 2025 (16:16 IST)
இந்திய பங்குச்சந்தை இன்று சுமார் 3000 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தாலும், ஃபார்மா பங்குகள் மற்றும் சரிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு டிரம்ப் மிரட்டல் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  
 
அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது சமூக வலை பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்ட  மருந்துகளின் விலையை 30 முதல் 80 சதவீதம் குறைக்கும் திட்டத்தில் கையெழுத்து இட உள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்காவில் மருத்துவச் செலவு மிகப் பெரிய அளவில் குறையும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த அறிவிப்புதான் பார்மா பங்குகளின் விலை குறைய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் ஃபார்மா நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் காப்புரிமை பெற்ற பொது மருந்துகள் 80 சதவீதம் வரை குறையலாம் என்றும், அதன் தாக்கம் இந்திய பார்மா பங்குகளின் நிலையை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
மொத்தத்தில் ஃபார்மா நிறுவனங்களுக்கு இனிவரும் காலம் ஒரு கடினமான காலமாகவே இருக்கும் என்றும், பெரிய அளவில் ஃபார்மா பங்குகளில் முதலீடு செய்பவர்கள் கவனமுடன் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட காலமாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு..!

பாகிஸ்தான் உடனான சண்டை குறித்த முழு விவரங்களை பகிர முடியாது: ஏர் மார்ஷல் ஏகே பாரதி

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு.. பெரும் பரபரப்பு..!

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு துணிக்கடையில் பயங்கர தீ விபத்து! லட்சக்கணக்கில் சேதம்..!

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments