கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி என தகவல்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,912 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,35,27,717 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,70,179 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 12,01,009 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி என தகவல். அதன்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,188 புள்ளிகள் சரிந்து 48.402 புள்ளிகளில் வர்த்தகம். இதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 353 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14 ஆயிரத்து 481 புள்ளிகளில் வணிகமாகிறது.