Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தாக்குதல்? ஒட்டு கேட்ட உளவுத்துறை: பாக். சதித்திட்டம் முறியடிக்கப்படுமா?

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (16:04 IST)
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 
 
இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதால் இந்தியா பாகிஸ்தனை தனிமைப்படுத்தவும், அந்நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தவும் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியா மீது மீண்டும் இம்மாதிரியான தாக்குதல் நடக்கவிருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 
 
அதாவது, மூன்று தற்கொலைப்படை தீவிராதிகள் உள்பட 21 தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளதாக தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் பயங்கரவாத அமைப்பின் தளபதி ரியாஸ் வெளியிட்ட ஆடியோ ஒன்றில், புல்வாமா தாக்குதல் போலவே வருங்காலத்தில் தாக்குதல்கள் நடத்தப்படும். 
 
பிணங்களை புதைக்க சவப்பெட்டிகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் அமைப்பில் 15 வயது சிறுவன் கூட தற்கொலை படை தாக்குதலுக்கு தயாராக இருக்கிறான் என இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இப்படிப்பட்ட வெளிப்படையான மிரட்டலும், உளவுத்துறையின் எச்சரிக்கையும் வந்துள்ளதால் இந்தியா தரப்பில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிகப்படும் என தெரிகிறது. அதோடு, புல்வாமா தாக்குதலுக்கே பாகிஸ்தானை பழிதீர்க்க வேண்டும் என காத்திருப்பதால், நிச்சயம் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments