Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டனைக்கு தடை விதிக்க முடியாது..! பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!!

Senthil Velan
திங்கள், 29 ஜனவரி 2024 (12:14 IST)
மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி பொன்முடி தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 
இந்த தண்டனையை எதிர்த்தும், நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தொடர்ந்தார். 
 
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

ALSO READ: பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை - திமுக கூட்டணி கட்சிகளும் சிதறும்..! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!
 
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் அளிக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தாக்கல் செய்த பின்னரே, பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments