Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… கண்காணிக்கும் இந்திய விமானப்படை!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (12:42 IST)
சீனா சென்ற ஈரான் விமானம் இந்திய வான்பரப்பில் பறந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் இருந்து புறப்பட்ட மகான் ஏர் விமானம் ஒன்று சீனா நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானம் இந்திய வான்பரப்பில் பறந்துக் கொண்டிருந்தபோது அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக இந்திய விமானப்படை விமானங்கள் புறப்பட்டு மகான் ஏர் விமானத்தை கண்காணித்து பின் தொடர்ந்தன. அந்த விமானத்தை தொடர்ந்து சீனாவிற்கு பயணிக்க அனுமதிக்கும்படி சீனா கேட்டுக்கொண்ட நிலையில் இந்திய ராணுவ விமானங்கள் குறிப்பிட்ட தொலைவில் விமானத்தை கண்காணித்தபடி சென்றன.

தற்போது மகான் ஏர் விமானம் பத்திரமாக இந்திய வான் எல்லையை விட்டு சீன வான் எல்லைக்குள் சென்று விட்டதாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments