Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? ஐ.ஆர்.டி.சி. என்ன சொல்கிறது??

Arun Prasath
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:43 IST)
காசி மஹாகால் விரைவு ரயிலில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? என்பது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம் அளித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் வாரணாசி, உஜ்ஜைன், ஜான்சி, கான்பூர் வழியாக  சிவன் ஸ்தலங்களை இணைக்கும் காசி மஹாகால் என்னும் சிறப்பு ரயில் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த ரயிலில் ஏசி வசதியுடன் குறைவான சத்தத்தில் சிவன் பாடல் ஒலிக்கப்படுகிறது. மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ரயிலில் பி-5 கோச்சின் 64 ஆவது இருக்கையை சிவனுக்காக ஒதுக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இதனை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்துள்ளது. ”ரயிலின் தொடக்க ஓட்டம் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர சிவன் புகைப்படம் வைத்து பூஜை செய்யப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments