இஸ்ரோ அமைப்பின் தலைவராக இதுவரை தமிழரான சிவன் இருந்த நிலையில் தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ அமைப்பின் தலைவராக தமிழர் சிவன் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் என்பதும் அவரது தலைமையில் இஸ்ரோ அமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோம்நாத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இஸ்ரோ தலைவராக சோம்நாத் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் இஸ்ரோ தலைவராக நியமனம் செய்யப்பட்ட சோமநாத் அவர்களுக்கு விஞ்ஞானிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்